TamilsGuide

ஏ9 வீதி விளாவோடை பகுதியில் விபத்து

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஏ9 வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது,  கிளிநொச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகச் சென்ற மகிழுந்து (கார்) மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் உடனடியாக மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Comment