TamilsGuide

இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு பின்வரும் ஆடவர் தேசிய ஒருநாள் (ODI) மற்றும் டி20 (T20I) அணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.  தெற்காசியஉடைகளைத் தேர்ந்தெடு

இச்சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இலங்கை அணி 2026 செப்டம்பர் 5 ஆம் தேதி இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்லும்.

குசல் மெண்டிஸ் இரு வடிவங்களிலும் அணியை வழிநடத்துவார்.

சரித் அசலங்க அவருக்குத் துணைக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பத்தும் நிசங்க மீண்டும் ஒருமுறை அணியின் தொடக்க வரிசையை வலுப்படுத்துவார்.

அதேவேளையில், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே மற்றும் பவன் ரத்நாயக்க ஆகியோர் நடுவரிசையை வலுப்படுத்தவுள்ளனர்.

வனிந்து ஹசரங்க மற்றும் துனித் வெல்லலகே ஆகியோரின் சகலதுறை தெரிவுகள் இலங்கைக்கு இருக்கும் அதே வேளையில், தசுன் ஷனக இந்த வரிசையில் மேலும் அனுபவத்தை வழங்குகிறார்.

பந்துவீச்சில் மஹேஷ் தீக்ஷன, சச்சிந்து கொலம்பகே, துஷ்மந்த சமீர, எஷான் மலிங்க, அசித்த பெர்னாண்டோ மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் அடங்குவர்

டி:20 தொடருக்கான, லஹிரு உதாரா மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் அணிக்குள் வருகிறார்கள், நுவான் துஷார மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் கூடுதல் வேகப்பந்து வீச்சு விருப்பங்களை வழங்குகின்றனர்.
 

Leave a comment

Comment