TamilsGuide

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்த சுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய நடைபாதை யாத்திரை இன்று ஆரம்பமானது.

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதன் பின்னர் முருகப்பெருமானின் திருவுருவம் தாங்கிய ஊர்தியோடு வேல் தாங்கி நடைபவனி ஆரம்பமானது.

இன்று ஆரம்பித்த இந்த பாதயாத்திரையானது எட்டு நாட்கள் ஏ 9 வீதி ஊடாக சென்று அனைத்து கோவில்களிலும் தரிசித்து ஒன்பதாம் திகதி நல்லூர் தேர்த்திருவிழா அன்று நல்லூர் கோவிலை சென்றடையும்.
 

Leave a comment

Comment