அமெரிக்க எதிரிக்கு ஈரான் மறக்க முடியாத பாடங்களைக் கற்பிக்கும் என ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.
தமது எக்ஸ் (x) தளத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன்,அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு கடுமையான மற்றும் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளை மற்றும் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள தளங்கள் மற்றும் ரேடார் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்த 13 பெலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை ஜோர்டான் நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன.
எனினும், ஜோர்டானில் உள்ள கேம்ப் டிடின் அமெரிக்க முகாம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.


