• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைத் துறைமுக அமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் கனடா அரசாங்கம் தனது ஆதரவை வழங்க உடன்பாடு

இலங்கை

திருகோணமலையில் அமைந்துள்ள 61 எண்ணெய் தாங்கிகளில் 24 தாங்கிகளை மீண்டும் சக்ரியப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், இலங்கைத் துறைமுக அமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கும் கனடா அரசாங்கம் தனது ஆதரவை வழங்க உடன்பாடு தெரிவித்‌துள்ளது.

துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் கனடா உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்ட்டின் (Mrs. Isabella Martin) ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்போது துறைமுகச் செயல்பாடுகளின் திறனை உயர்த்த நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும், கடல்சார் சேவைத் தகவல்களைப் பரிமாறும் டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
 

Leave a Reply