TamilsGuide

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் - வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்ட 15ஆம் திருவிழா சிறப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 15ஆம் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது, வள்ளி தெய்வானை சமேத வேல் பெருமான் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.

வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment