TamilsGuide

ஓய்வை அறிவித்தார் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நாயகன் லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது "வேதனையான" ஒரு முடிவு என்றாலும், "அதற்கான நேரம் வந்துவிட்டது" என்பதைத் தான் புரிந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்குத் தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த 39 வயதான மெஸ்ஸி, தனது நாட்டுக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார்.

இதன் மூலம் அர்ஜென்டினா அணியின் அதிக கோல்களை அடித்த வீரர் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அணிக்காகத் தனது முழு உழைப்பையும் வழங்கிவிட்டதாகவும், இனி "வழங்குவதற்கு எதுவும் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment