TamilsGuide

நான் இங்க தான் இருக்கேன் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா அவரது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகவே செய்தி வருகிறது.

ஹிந்தி படங்களில் மீண்டும் நடிக்க தொடங்க, குழந்தைகள் படிப்பு ஆகியவற்றுக்காக மட்டுமே மும்பைக்கு சென்றதாக ஜோதிகாவும் கூறி இருந்தார்.

நான் சென்னை தான்..

இந்நிலையில் இன்று கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சூர்யாவும் கலந்துகொண்டார்.

மேடையில் பேசிய அவர் "நான் சென்னை தான். இங்கேயே தான் இருக்கிறேன். வந்து வந்து போகவில்லை."

"நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும். நான் இங்கேயே தான் இருக்கிறேன். அங்கே தான் போயிட்டு போய்ட்டு வரேன்" என சூர்யா கூறினார்.   

Leave a comment

Comment