• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்

இலங்கை

நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பெற்றோலின் விலையை குறைப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) அறிவித்துள்ளது. இலங்கைஉணவு

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை லிட்டருக்கு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது; அதாவது, அதன் விலை 414 ரூபாவிலிருந்து 399 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை லிட்டருக்கு 20 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது; அதாவது, அதன் விலை 495 ரூபாவிலிருந்து 475 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும்.

அண்மைய விலை மாற்றத்தின்படி, டீசல், சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது.
 

Leave a Reply