TamilsGuide

நேபாள பெருவெள்ளத்தில் நூலிழை தப்பிய குடும்பம் - தாயின் துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!

இயற்கை சீற்றத்தால் நிலைகுலைந்துள்ள நேபாளத்தில், கட்டுக்கடங்காத பெருவெள்ளத்தில் இருந்து தனது இரண்டு குழந்தைகளை ஒரு தாய் நூலிழையில் காப்பாற்றும் நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாகப் பயங்கரமான பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கார்கள், பேருந்துகள், ராட்சத மரங்கள், பாலங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் எனத் தன் பாதையில் உள்ள அனைத்தையும் இந்த வெள்ளம் சுருட்டி இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்த இரண்டு சிறு குழந்தைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு தாய் சாலையில் ஓடுகிறார்.

அவர்களுக்குப் பின்னால் ஆக்ரோஷமாகப் பாய்ந்து வரும் வெள்ள நீர், நொடிப் பொழுதில் அவர்கள் நின்ற சாலையை முழுமையாக ஆக்கிரமிக்கிறது.

அவர்கள் சாலையைக் கடந்து மேடான பகுதியை நோக்கி ஓடிய அடுத்த சில வினாடிகளில், அங்குள்ள மின் கம்பங்கள் வெடித்துச் சிதறி வெள்ளத்தில் மூழ்குகின்றன.

கண்சிமிட்டும் நேரத்தில் சுதாரித்துக் கொண்டு அந்தத் தாய் ஓடியதால் மட்டுமே, மூவரின் உயிரும் இன்று நூலிழையில் தப்பியுள்ளது.
 

Leave a comment

Comment