TamilsGuide

அறிவில் ஓங்கி வையம் தழைக்கட்டும் 

கவிஞர் வைரமுத்து
கல்வி அறக்கட்டளை
பொருளாதாரத்தில் நலிவுற்ற
ஆனால் கல்வியில் வலிவுற்ற
பிள்ளைகளுக்குக்
கடந்த 15 ஆண்டுகளாகக்
கல்வி உதவிநிதி
வழங்கி வருகிறது
16ஆம் ஆண்டு உதவிநிதியை
வடுகபட்டியில்
நேற்று வழங்கினேன்
ஒருவருக்கு
இருபதாயிரம் வீதம்
ஏழு பிள்ளைகளுக்கு
ரூபாய் ஒருலட்சத்து நாற்பதாயிரம்
வழங்கப்பட்டது
ஒரு சமூகத்துக்கு
எது முக்கியமானதோ
அது வியாபார வட்டத்துக்குள்
வந்துவிடுகிறது;
கல்வியும் அப்படித்தான்
தரமான கல்வி
பொதுவுடைமை
ஆகிற காலம்தான்
அறிவின் பொற்காலம்
அதுவரை
நம் பிள்ளைகளைத்
தாழவிடாமல்
தாங்கிப் பிடிப்பது
அறங்களில் சிறந்த அறமாகும்
அறிவில் ஓங்கி
வையம் தழைக்கட்டும் 


 

Leave a comment

Comment