TamilsGuide

அல்ல போலேலோ நடனம் ஆடும்போது நான் கர்ப்பமாக இருந்தேன்... பூர்ணா ஓபன் டாக் 

சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்தடுத்து பிஸியாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கடைசியாக 2025ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படத்தை தொடர்ந்து ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.

வரும் அக்டோபர் 15ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் அனிருத் இசையில் தயாராகி இருக்கும் முதல் சிங்கிள் அல்ல போலேலோ பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

அந்த பாடலில் நடிகை பூர்ணா ஸ்பெஷல் நடனம் ஆடியுள்ளார். பாடல் குறித்து அவர் பேசுகையில், 6 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது, எனக்கு 5 மாதங்களுக்கு முன்பு தான் 2வது குழந்தை பிறந்தது.

ஆலோ அலப்பலோ பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு அகண்டா படப்பிடிப்பிற்கு சென்ற பிறகுதான் நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் எனக்கு தெரிந்தது. கடினமாக நடனம் ஆடிவிட்டு, என் அம்மா நீ கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்லை என்றார்.

எனவே மீண்டும் செக் செய்தபோது நான் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. எனது 2வது குழந்தை பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்த பாடலுக்கு நடனமாடியது தான் நினைவுக்கு வருகிறது என கூறியுள்ளார்.

அதேபோல் படப்பிடிப்பில் தன் கண்களை பார்த்துவிட்டு உங்களுடைய கண் மிகவும் பவர்ஃபுல்லான கண் என ரஜினி பாராட்டியதையும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment