TamilsGuide

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு

எப்பாவலவில் உள்ள லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில், ரூ. 110 மில்லியன் மதிப்பிலான புதிய செயல்பாட்டு வாகனங்களும் இயந்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெட்டியின் தலைமையில், இது தொடர்பான நடவடிக்கைகள் நேற்று (27) நடைபெற்றன.

இந்தத் திட்டத்தின் கீழ், ரூ. 79 மில்லியன் செலவில் இரண்டு வீல் லோடர்களும், ரூ. 18 மில்லியன் செலவில் இரண்டு டிப்பர் லொறிகளும் , ரூ. 13 மில்லியன் செலவில் இரண்டு ஃபோர்க்லிஃப்ட்களும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் சேர்க்கப்பட்டன.

மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஓட்டுநர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.
 

Leave a comment

Comment