TamilsGuide

தமிழகத்தில் மிக மோசமான வசூலில் டாக்ஸிக், இரண்டாம் நாள் பெரும் சரிவு

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் ரூ. 400 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் டாக்சிக்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது வரை இப்படம் மிக மோசமான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

தமிழகத்தில் முதல் நாள் ரூ. 7 கோடி வரை வசூல் செய்த இப்படம், இரண்டாம் நாளான நேற்று வெறும் ரூ. 2 கோடி மட்டுமே தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம்.

இதனால், இந்த படம் 2 நாட்களில் முடிவில் ரூ 9 கோடி வரை வசூல் செய்ய, கண்டிப்பாக விநியோகஸ்தர்களுக்கு டாக்சிக் பெரிய நஷ்டத்தையே கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வரும் நாட்களில் மொத ராத்திரி மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கே அதிக ஷோக்கள் ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment