TamilsGuide

நடிகர் சூரி ஹீரோ ஆக 25 வருடங்கள் ஆனது மண்டாடி பட விழாவில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் மண்டாடி. இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியை அடிப்படையாக கொண்டும் படம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தில் முத்துக்காளி எனும் கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் மண்டாடி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவுடன் இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நடிகர் சூரியின் திரைப்பயணம் குறித்து பெருமையாக பேசினார்.

இதுகுறித்து பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, "சூரி சார் சங்கமம் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடித்திருந்தார். அந்தப் படம் 1999-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அன்று தொடங்கி தற்போது சூரி ஹீரோ ஆக 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

அவர் போராடினார், போராடினார், போராடினார்- அவர் தன்னுடைய இடத்தை கைவிடவே இல்லை. எதையும் கைவிடாமல் இருந்தால் ஒருநாள் சாதிக்கலாம் என்பதற்கு சூரி மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்," என்று தெரிவித்தார்.

காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வளத்தையும் அவற்றின் திசைவழி போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்க செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரைத்தான் மண்டாடி என அழைப்பர். இதில் சூரி தலைவராக இருப்பதால் படத்திற்கு மண்டாடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மண்டாடி திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதலே, இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
 

Leave a comment

Comment