• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பணிப்பொறுப்பேற்பு

இலங்கை

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், இன்று ஆவணி 26ஆம் திகதி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் தமது ஆயர் பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து பவனியாக பேராலயத்திற்கு அழைத்துவரப்பட்ட அவருக்கு சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

நிகழ்வில் இலங்கையின் பல்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள், துறவிகள், பல்சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான இறைமக்கள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள், 2000ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டதுடன், 2020ஆம் ஆண்டு கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், 2024ஆம் ஆண்டு மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் பணியாற்றியுள்ளார்.

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அவரது பணிப்பொறுப்பேற்பு, மறைமாவட்டத்தின் ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
 

Leave a Reply