வெறும்அறிவிப்புடனோ, ஒருசில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்ட நிலையிலோ கைவிடப்பட்ட தமிழ் திரைப்படங்கள்
சினிமா
இணைந்த கைகள்− உலகம் சுற்றும் வாலிபனுக்கு முன்பாக, எம்.ஜி.ஆர், தயாரித்து, இயக்கி, நடித்த பிரம்மாண்ட படம். இப்படத்திற்காக பதிவான இரு பாடல்கள் உலகம் சுற்றும் வாலிபன் படத்திலும் (நிலவு ஒரு பெண்ணாகி; அவளொரு நவரச நாடகம்), ஒரு பாடல் சிரித்து வாழவேண்டும்(கொஞ்சநேரம் என்னை மறந்தேன்) படத்திலும் இடம்பெற்றன. ஈரானில் படமாக்கத் திட்டமிட்ட இப்படம், அனுமதி கிடைக்காததால், இங்கேயே படமாக்கப்பட்டது. மன்னராட்சிக் கால கதை. கீதாஞ்சலி என்பவர், ஜோடியாக நடித்தார். பிறகு, என்ன காரணத்தாலோ படம் கைவிடப்பட்டது.
2. அண்ணா நீஎன் தெய்வம்: ஶ்ரீதர் இயக்கத்தில், எம்.ஜி.ஆர் நடித்து, பாதியில் நின்றுபோன படம். இப்படத்தின் இரு பாடல்களும், சில காட்சிகளும், பாக்யராஜ் இயக்கி, இரட்டைவேடங்களில் நடித்த, "அவசர போலீஸ் 100" என்ற படத்தில் இடம்பெற்றுள்ளன.
3.காவடிச்சிந்து: பாக்யராஜ்−அமலா நடிப்பில், பாக்யராஜ் இசை−இயக்கத்தில் உருவான இப்படத்தின் அனைத்து பாடல்களும் கேசட்டில் வெளியாகி சூப்பர்ஹிட்டாயின. ஒரு பாடல் மட்டும் (ஜாமக்கோழி கூவியாச்சு) "பட்டணந்தான் போகலாமடி" என்ற வேறு படத்தில் இடம்பெற்றது. இப்படத்தின் ஒரு நகைச்சுவைக்காட்சி மட்டும், வேறொரு தமிழ்ப்படத்தில் இடம்பெற்றது(படம் பெயர் நினைவில்லை). என்ன காரணத்தாலோ இப்படமும் பாதியிலேயே கைவிடப்பட்டது.
4.நல்லதை நாடு கேட்கும்: எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான படம். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தநிலையில், படம் கைவிடப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, ஜேப்பியார் இதேபெயரில் தயாரித்து, நடித்து வெளியிட்ட படத்தில், இப்படத்தின் சில காட்சிகள் இடம்பெற்றன.
5.பவானி−எம்.ஜி.ஆர்−அஞ்சலிதேவி நடிப்பில், கண்ணதாசனின் கதை−வசனம்−பாடல்− இணைதயாரிப்பில் உருவான இப்படம், 20,000 அடிகள் தயாரிக்கப்பட்ட நிலையில், கைவிடப்பட்டது.
6.அடிமைப்பெண்: கே.ஆர்.விஜயா, சரோஜாதேவி, ஜெயலலிதா, நம்பியார் உள்ளிட்ட நடிகர்களை வைத்து, எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்த படம், 10,000 அடிகளுக்குமேல் தயாரிக்கப்பட்ட நிலையில், படம் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காமல் போனதால், படச்சுருளை எரித்துவிட்டு, வேறொரு புதிய கதையுடன், நடிகர்கள் பலரை மாற்றி தற்போதுள்ள அடிமைப்பெண் படத்தை, தயாரித்து நடித்தார். இயக்குநர் பொறுப்பை, கே.சங்கரிடம் ஒப்படைத்தார்.
இவை போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்கள், வெறும்அறிவிப்புடனோ, ஒருசில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்ட நிலையிலோ, பாதிபடங்கள் வரை வளர்ந்த நிலையிலோ கைவிடப்பட்டுள்ளன. சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இதுகுறித்து, மணிவாசகர் பதிப்பகம், தனியொரு நூலே வெளியிட்டுள்ளது.
--






















