• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேபாளத்திற்கு உதவ களமிறங்கிய ஐக்கியநாடுகள் சபை

நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையத் தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவருடனும் நான் துணை நிற்கிறேன் என்று கூறியுள்ள அவர், நேபாள அரசாங்கத்தின் தலைமையிலான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. குழுக்களும் அதன் பங்காளர்களும் தேவையான நிவாரண பொருட்களையும் பணியாளர்களையும் திரட்டி வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply