TamilsGuide

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கிழக்கில் தமிழர்களின் தனித்துவ சைவசமய வழிபாடுகளுடனும் பாரம்பரியத்துடனும் பல நூற்றாண்டுகாலமாக இந்த திருச்சடங்கு நடைபெற்றுவருகின்றது.

கடந்த ஆம் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமான ஆலயத்தின் திருச்சடங்கு 11தினங்கள் வெகுவிமர்சையாக நடைபெற்றுவந்தன.

இந்த திருச்சடங்கில் அம்பாளின் முத்துச்சப்புர பவனி, வீரகம்பம் வெட்டுதல், நோற்புக்கட்டுதல், மகா சக்தி யாகம் என பல்வேறு திருச்சடங்குகள் இடம்பெற்றன.

நேற்றைய தினம் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து தெய்வாதீகள் புடைசூழ தீக்குளிக்கு வருகைதந்து தீக்குளியில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தேவாதிகள் புடைசூழ தீமிதிப்பு உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றன.

இந்த தீமிதிப்பு உற்சவத்தில் இலங்கை உட்பட வெளிநாடுகளிலும் இருந்துவந்த பெருமளவான பக்தர்கள் பங்குகொண்டமை சிறப்பம்சமாகும். 

Leave a comment

Comment