TamilsGuide

இலங்கை கடற்படையில் பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவாக பேருந்து தரிப்பிடம்

இலங்கை கடற்படையில் பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுப் பேருந்து தரிப்பிடம் நேற்றைய தினம் காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடத்தில் திறந்து வைக்கப்பட்டது. 

மு.கனகரத்தினத்தின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பேருந்து தரிப்பிடத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் உடுவில் பிரதேச செயலர்,  சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,  பிரதேச சபை உறுப்பினர்,  கிராம அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Comment