TamilsGuide

சூரியின் மண்டாடி டீசர் வெளியானது

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் மண்டாடி. இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியை அடிப்படையாக கொண்டும் படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் முத்துக்காளி எனும் கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கு யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், செப்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 
 

Leave a comment

Comment