இலங்கையில் தற்போது நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். இலங்கைசெய்தி
அதனால், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்கான வானிலைத் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டதில் இந்த நிலைமை வெளிப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டார்.
நாட்டின் ஆண்டு மழைவீழ்ச்சியில் சுமார் 30 சதவீதம் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே கிடைப்பது வழக்கம்.
இம்முறை அந்தக் காலப்பகுதியில் பருவகால சராசரியை விட அதிக மழை பெய்யக்கூடும்.
அதிகளவு மழை பெய்தால் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பக்கூடும் என்பதுடன், சில பகுதிகளில் வெள்ளநிலை உருவாகும் அபாயமும் காணப்படுகிறது.
எனவே, அத்தகைய சூழ்நிலைக்கு தயாராக இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எல் நினோவின் தாக்கம் மேலும் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.


