TamilsGuide

22வது திருத்தத்திற்கு எதிராக மற்றொரு மனு தாக்கல்

அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22வது திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை சமூக ஊடக ஆர்வலர்களான இரஜ் வீரரத்ன, சமர விஜேசூரிய, நிலந்த சத்சர கமகே மற்றும் மிலிந்த ராஜபக்ச ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

முன்மொழியப்பட்ட மசோதாவில் உள்ள பிரிவுகள் நீதித்துறையின் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட மசோதாவை பொது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
 

Leave a comment

Comment