TamilsGuide

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்..

இயக்குநர் இமயம்
பாரதிராஜாவுக்கு
மணிமண்டபம் கட்டும் 
அறிவிப்பை வெளியிட்ட
தமிழ்நாட்டு அரசுக்கும்
முதலமைச்சர் 
ஜோசப் விஜய் அவர்களுக்கும்
கோரிக்கையை 
முதலில் முன்வைத்தவன்
என்ற முறையில்
என் முதல் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்
அல்லி நகரத்தின் கலாசாரத்துக்கு
டெல்லி நகரத்து
அங்கீகாரம் பெற்றறுத்தந்த
பெருங்கலைஞர் பாரதிராஜா
அடித்தட்டு மக்களின்
கனவுகளை நம்பிக்கைகளை
வாழ்வியலை விழுமியங்களைக் 
காட்சிப் படுத்திய
கலைப் பெருமகன்
அவருக்கான மணிமண்டபத்தை
அவர் பிறந்த 
தேனி மாவட்டத்திலேயே
அமைப்பது என்பது
அவருக்கு அரசு வழங்கும்
கடைசி மரியாதையாகும்
தமிழ்நாட்டு அரசுக்கு
என் முதல் மரியாதை
மீண்டும் நன்றி.

 கவிப்பேரரசு 

வைரமுத்து 
 

Leave a comment

Comment