TamilsGuide

இலங்கைக்கான சோவையை நாளை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் – கொழும்பு இடையிலான தனது புதிய நேரடி விமான சேவையை நாளை (25) தொடங்குகின்றது.

இந்த விமான சேவையின் முதல் விமானமானது நாளை (25) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

அதன்படி, JQ5 என்ற முதல் விமானம் மெல்போர்னிலிருந்து நாளை நண்பகல் 12:00 மணிக்குக் புறப்பட்டு, மாலை 5:50 மணிக்குக் கொழும்பை வந்தடையும் 

வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

திரும்பும் பயணமான JQ6 விமானம் கொழும்பிலிருந்து இரவு 7:50 மணிக்குக் புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு மெல்போர்னை சென்றடையும்.

போயிங் 787-8 ட்ரீம்லைனர் (Boeing 787-8 Dreamliner) ரக விமானங்களைப் பயன்படுத்தி, இந்த புதிய சேவை வாரத்திற்கு மூன்று முறை – செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் – இயக்கப்படும். 

மெல்போர்ன்-கொழும்பு வழித்தடமானது, தெற்காசியாவிற்கான ஜெட்ஸ்டாரின் முதல் நேரடிச் சேவையாகவும், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான அந்த நிறுவனத்தின் முதல் செயல்பாடாகவும் அமைகிறது.  

மெல்போர்ன் மற்றும் கொழும்புக்கு இடையே அவுஸ்திரேலியாவின் ஒரே குறைந்த கட்டண நேரடிச் சேவையாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஹெய்லிஸ் ஏவியேஷன் (Hayleys Aviation) இலங்கையில் ஜெட்ஸ்டார் (Jetstar) நிறுவனத்தின் பொது விற்பனை முகவராக (GSA) செயல்பட்டு, உள்ளூர் சந்தையில் அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் பிரதிநிதித்துவ நடவடிக்கைகளைக் கையாள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment