TamilsGuide

புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் கட்டணங்களை அறிவித்தது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான புதிய மின்வழங்கல் கட்டணங்களை (Tariff rates) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கைபயணம்

ஆணைக்குழு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக, குறித்த புதிய மின்வழங்கல் கட்டண முறைமை நாளை (25) முதல் உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்வழங்கல் கட்டண முறைமைக்கான விரிவான வழிமுறைகள் மற்றும் கொள்முதல் விலைகள் என்பன ஆணைக்குழுவினால் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளன.

மின் உற்பத்தியின் தன்மை மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப இந்தப் புதிய மின்வழங்கல் கட்டண முறைமையானது 03 முதன்மைப் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களுக்கான கட்டண முறைமை, மின்சார நுகர்வோருக்கான கட்டண முறைமை மற்றும் மின்கல சேமிப்பு அமைப்புகளுடன் (Battery Storage Systems) கூடிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களுக்கான கட்டண முறைமை ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தக் கொள்முதல் விலைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

Leave a comment

Comment