• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதனால் தான் நடிகர் திலகத்தை உலகின் ஒப்பற்ற நடிகர் என்கிறோம்... 

சினிமா

1970 ம் ஆண்டு வெளிவந்த சொர்க்கம் திரைப்படத்தில் ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் ஓரங்க நாடகத்தில் நடிகர் திலகம் ஜூலியஸ் சீசராக தனது உலகத்தரத்தினாலான நடிப்பினால் ஜொலித்திருப்பார்...

ஒரு 10 நிமிடக் காட்சியில் தான் எத்தனை ஸ்டைல்...பின்னணி இசையற்ற காட்சியில் ஆரம்பத்தில் அவைக்குள் நுழைகையில் அந்த சர்க்... சர்க் என்ற காலணி சத்தத்தோடு அவருக்கே உரித்தான வித்தியாசமான நடை , மேலும்

அவரது அட்டகாசமான ஒப்பனை , ஸ்டைலான உடல்மொழி, கம்பீரமான கண்கள், உறுதியான குரல் மற்றும் வசனம் பேசும் பாணி என அனைத்திலும் தன்னை வெல்ல வேறொரு நடிகன் இல்லை என்று நிரூபித்து இருப்பார்.

குறிப்பாக சிவாஜி உள்ளே நுழையும்போது நிலவும் அந்தத் தனித்துவமான அமைதியும், அவர் குத்தப்படும்போது பின்னணியில் ஒலிக்கும் அந்த இசைக்குரல் ரீங்காரமும் (chorus humming) மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கும் 

நாடகத்தின் இறுதிக் காட்சியில் புருட்டஸ் கத்தியால் குத்திய உடன் வலி தாங்காது தரையில் விழுந்து  கால்களை வெட்டி , வெட்டி வலிப்பு வந்தது போல் உயிர்விடுவார்...இயக்குனருக்கு ஒன்றும் புரியவில்லையாம்..பின்னர் சிவாஜியே சொல்லியிருக்கிறார்...படப்பிடிப்புக்கு முதல் நாள் தற்செயலாக தனது நண்பரான வரலாற்றுப் பேராசிரியர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும் போது ஜூலியஸ் சீசருக்கு வலிப்பு நோய் உண்டு என்பதையும் அதை தான் அந்தக் காட்சியில் பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்....அதனால் தான் நடிகர் திலகத்தை உலகின் ஒப்பற்ற நடிகர் என்கிறோம்... 

( ஜூலியஸ் சீசருக்குக் காக்கா வலிப்பு (கால்-கை வலிப்பு அல்லது Epilepsy) நோய் இருந்ததாகப் புளூடார்ச்சு (Plutarch) மற்றும் சுட்டோனியசு (Suetonius) போன்ற பண்டைய ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். வில்லியம் ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற 'ஜூலியஸ் சீசர்' நாடகத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது ). 

Bala Subramanian

Leave a Reply