TamilsGuide

உலக குத்துச்சண்டை சாம்பியன் சுட்டுக்கொலை

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ஜோலானி டெட், கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள எம்தான்சேனே பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

38 வயதான ஜோலானி தனது வீட்டிற்கு காரில் சென்றிருந்தபோது, முகமூடி அணிந்த இருவர் அவரை மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவருடன் காரில் இருந்த 27 வயதுடைய பெண்ணும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜோலானி டெட் 2007–2008ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.எஃப். பறக்கும் எடைப் பிரிவிலும், 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் டபிள்யூ.பி.ஓ. இளம்பருவ எடைப் பிரிவிலும் உலக சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தென்னாப்பிரிக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment