TamilsGuide

ஐபோனால் உயிரிழந்த குடும்பம் - பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

ஐபோன் வாங்கி தரவில்லை எனக் கூறி தனது பெற்றோரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த இளைஞரும் அவரை காப்பாற்ற சென்ற அவரின் பெற்றோரும் மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள கவ்டா மலையில் நடந்திருக்கிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அந்த 18 வயது வாலிபர் மலையில் விளிம்பில் நின்றுகொண்டு தனக்கு Iphone வாங்கி தர வேண்டும்.

இல்லையென்றால் குதித்துவிடுவேன் என மூன்று மணி நேரமாக அவரின் பெற்றோரை தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். ‘எப்படியாவது உனக்கு ஐபோன் வாங்கி கொடுத்து விடுகிறோம்.

கீழே குதித்துவிடாதே ’ என அவரின் பெற்றோர் கெஞ்சிதுடன், அங்கிருந்த கிராம மக்கள் மற்றும் காவல் அதிகாரிகளும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் தடுமாற அவரை எப்படியாவது பிடித்து இழுத்து விடலாம் என அவ்ரை பிடிக்க வாலிபரின் தந்தை அருகில் சென்றபோது இருவதுமே மலை உச்சையிலிருந்து கீழே விழுந்தனர்.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் தாய் இருவரையும் காப்பாற்றி விடலாம் எனக் கூறி அவரும் கீழே குதித்திருக்கிறார். இறுதியில் அவர்கள் மூவருமே கீழே விழுந்து உயிரிழந்துவிட்டனர்.

இந்த தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்கலில் வெளியாகியுள்ள நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment