நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் களமிறங்கி, தேர்தலில் ஜெயித்து தற்போது முதலமைச்சராகவும் பதவி வகுத்து வருகிறார். அவர் வெற்றி பெற்ற பிறகு தமிழ் சினிமாவில் மேலும் பல நடிகர்கள் தாங்கள் அரசியலுக்கு வர விரும்புவதாக வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.
ராகவா லாரன்ஸ், விஷால் தொடங்கி தனுஷ் வரை இந்த லிஸ்ட் நீள்கிறது.
சிவகார்த்திகேயன்
இந்நிலையில் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் இன்று நகை கடை திறப்பு விழா ஒன்றுக்காக வந்திருந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் "வருங்கால முதலமைச்சர்" என அவரை பார்த்து கத்தினார். அதற்கு சிவகார்த்திகேயன் உடனே வாய் மீது விரல் வைத்து அந்த ரசிகரை அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. இதோ பாருங்கள்.


