TamilsGuide

15 ஆயிரத்தில் எடுத்த படம் கோடிக்கணக்கில் வசூல்.. உலகமே கலாய்த்து ஹிட் ஆன படம்

சினிமா துறையில் பல அதிசயங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது நடந்துள்ள அதிசயம் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆம், சீனாவில் அம்மாவும், பையனும் இணைந்து ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் பெயர் 'Niu Lai'. இந்த படம் மாடுகளை மையப்படுத்திய அனிமேஷன் படமாக வந்துள்ளது.

இதை பார்த்த எல்லோருமே கழுவிதான் ஊற்றினார்கள். வெறும் 15 ஆயிரம் ரூபாயில் எடுத்த இந்த படம் முதல் 20 நாள் 300 பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

ஆனால், இந்த திரைப்படத்தை பலரும் கலாய்த்து கிண்டல் செய்து வந்தனர். எனினும், குடும்பங்கள் தியேட்டருக்கு போவது நாளுக்கு நாள் அதிகரித்ததால், இப்படத்தின் வசூலும் குவிந்து தற்போது பாக்ஸ் ஆபிஸில் ரூ. 20 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதை உலக சினிமா ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுடன் வியந்து பார்த்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment