அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் Avengers: Doomsday திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், அதில் இப்படம் தற்போதே $100 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஸ்பைடர்-மேன், தண்டெர் போல்ட்ஸ், லோக்கி, கேப்டன் அமெரிக்கா என மார்வல் தயாரிப்பில் சூப்பர் ஹீரோக்களின் தனித்தனி திரைப்படங்கள் வெளிவந்தாலும், இவர்கள் அனைவரும் இணைந்து நடிக்கும் Avengers திரைப்படத்திற்கு எப்போதும் தனி வரவேற்பு உள்ளது.
மார்வல் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் உலகளவில் 2 பில்லியன் வசூலை கடந்து மாபெரும் சாதனை படைக்கவுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மார்வல் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம்தான் Avengers: Doomsday.
Dr. Doom கதாபாத்திரத்தில் Robert Downey Jr., ஸ்டீவ் ரோஜர்ஸ் (Steve Rogers) வருகை, Avengers-ல் X-men குழு, தி OG ஸ்பைடர்-மேன் Tobey Maguire, The Fantastic Four குழு, தங்களை புதிய Avengers என சொல்லிக்கொள்ளும் Thunderbolts* என பல விஷயங்களை உள்ளடக்கியுள்ள Avengers: Doomsday திரைப்படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்த படம் குறித்து வெளிவரும் அப்டேட்ஸ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
அட்வான்ஸ் புக்கிங்
இந்நிலையில், உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் Avengers: Doomsday திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ளது. படத்தின் ரிலீஸுக்கு 4 மாதங்களுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை $100 மில்லியனை வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 950 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் உலகளவில், முதல் வாரத்தின் இறுதியில் இப்படம் $1 பில்லியனை(ரூ. 9,500 கோடி) எளிதாக கடந்து சாதனை படைக்கும் என திரை வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது. வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி Avengers: Doomsday திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


