TamilsGuide

இந்த காலத்தில் ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடியவில்லை- நடிகை ராதிகா சரத்குமார்

‘இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?’ என கேட்டேன். அவர் இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என சொன்னார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ நடிப்பில் கடந்த 14-ந்தேதி திரைக்கு வந்த படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதையொட்டி படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், ‘இந்தக் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை கவர்ந்து அதை தக்க வைத்துக் கொள்வது என்பது குறைந்துவிட்டது. ஒரு நிமிடத்திற்கு மேல் யாரிடமும் பேச முடிவதில்லை. ஆனால் ரசிகர்களை அன்பாலும் ... பாசத்தாலும்... ஒரே சிந்தனையுடன் இந்தப் படத்தை நிதானமாக கதையை சொல்லி.. அதில் ஒரு வெற்றியை பெற்று, அந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். இதை கேட்கும் போதும்... பேசும் போதும்... பெருமிதமாக இருக்கிறது.

இயக்குநர் வெங்கி இந்தப் படத்தின் கதையை ஒவ்வொரு காட்சியாக சொல்லும் போது அவரிடம், ‘இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?’ என கேட்டேன். அவர் இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என சொன்னார்.

அதன் பிறகு இயக்குநரிடம் ‘இந்த படத்தில் ஹீரோயின் அழகாக இல்லை என்றால்... இந்த படம் ஓடாது’ என்று சொன்னேன். அப்போது நாங்கள் அதற்காக பொருத்தமான நடிகையை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். அப்போது ஒரு நாள் ‘டியூட்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மமிதாவை அங்கு பார்த்தேன். அதன் பிறகு சரத்குமார் மிகத் திறமையான பெண். நன்றாக நடிக்கிறார் எனச் சொன்னார். அதன் பிறகு இயக்குநர் வெங்கி, மமிதா தான் ஹீரோயின் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

கமல்ஹாசனை நேற்று கூட சந்தித்தேன். அப்போது அவர் புத்திசாலித்தனமாக எழுதுவது எப்படி? என்பது குறித்து பயிற்சியும் விவாதமும் நடத்தப்பட வேண்டும் என்றார்.

சினிமாவில் ஒவ்வொரு கதைக்கும் பின்னால் ஒரு குடும்பம் இருக்கும். அந்த குடும்பத்திற்குள் ஒரு பந்தம் இருக்கும். அது சில படங்களில் முழுவதுமாக அமையும். அப்படி ஒரு திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

Leave a comment

Comment