Trump Praises India's Voting Process: இந்திய தேர்தல் நடைமுறைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவில் தீவிரமான வாக்காளர் அடையாள சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்திய தேர்தல் நடைமுறைகளை வெகுவாக பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல்களில் கட்டாய புகைப்பட அடையாள அட்டை நடைமுறை இல்லாதது குறித்து இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்(Gyanesh Kumar) உடன் நடைபெற்ற உரையாடல் குறித்து ட்ருத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.
அந்த உரையாடலின் போது, கட்டாய புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் எப்படி பாதுகாப்பான தேர்தலை நடத்த முடியும் என்று ஞானேஷ்குமார் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக டிரம்ப் மேற்கோள் காட்டினார்.
இந்தியாவில் நடந்த கடைசி தேர்தலில் 642 மில்லியன் மக்கள் தங்களது புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்கு செலுத்தியுள்ளனர். 1%க்கும் குறைவான மக்கள் மின்னஞ்சல் மூலமாக வாக்கு செலுத்தியுள்ளனர்.
வாக்களித்த ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை வைத்துள்ளனர்.
இந்த உரையாடல் டிரம்ப் தீவிரமாக வலியுறுத்தி வரும் The save america act மசோதாவிற்கு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


