TamilsGuide

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்

வியட்நாம் – இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. 

இதன் முதல் விமானம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) நேற்று (16) இரவு வந்தடைந்தது.

அதன்படி, ஹோ சி மின் நகரிலிருந்து VN-671 என்ற விமானமாக இயக்கப்பட்ட ஏர்பஸ் A320 விமானம், நேற்று இரவு 11.02 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது, விமானத்துக்கு இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் ஏற்பாடு செய்திருந்த நீர்பீரங்கி மரியாதையுடன் தொடக்க விமானம் வரவேற்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய கண்டி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
 

Leave a comment

Comment