இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் துணைத் தூதர் சாய் முரளி, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடளுமன்ற உறுப்பினர்களான சி. சிறிதரன் , எஸ்.சத்தியலிங்கம் , வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ கே. சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் , யாழ்ப்பாண கலைஞர்கள் , தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


