TamilsGuide

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முதலிடம் - சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல்

நடப்பு ஆண்டில் (2026) இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலிருந்தே அதிக அளவிலான பயணிகள் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 13 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,436,926 ஆகப் பதிவாகியுள்ளது.

இதில் 358,608 சுற்றுலாப் பயணிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 140,892 பேரும், சீனாவிலிருந்து 94,890 பேரும், ஜெர்மனியிலிருந்து 83,965 பேரும் வருகை தந்துள்ளனர்.

அதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் மொத்தம் 93,511 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் 49,759 பேரும், இரண்டாம் வாரத்தின் 06 நாட்களில் 43,752 பேரும் வருகை தந்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 13 நாட்களில் பதிவான சுற்றுலாப் பயணிகளின் வருகையிலும் இந்தியாவே முன்னிலை வகிக்கிறது.

இக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 20,378 பேரும், அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவிலிருந்து 10,491 பேரும், பிரான்ஸிலிருந்து 7,198 பேரும், சீனாவிலிருந்து 6,383 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment