TamilsGuide

3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்கிறது மியான்மர்

மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான வங்காளதேசத்திற்குத் தப்பியோடி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், வங்காளதேசம் வழங்கிய பட்டியலின்படி முதற்கட்டமாக 3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

அங்கு நிலவும் பாதுகாப்புச் சூழல் சீரடைந்தவுடன், இந்த 3 லட்சம் அகதிகளையும் மியான்மர் மீண்டும் தனது நாட்டிற்குள் அனுமதிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பயங்கரவாத பின்னணி கொண்ட சிலர் தவிர, மற்றவர்களைப் படிப்படியாகத் தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
 

Leave a comment

Comment