TamilsGuide

உக்ரைன் பயணிகள் ரயிலின் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல்

உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் பயணிகள் ரயிலின் இயந்திரம் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ரயிலின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தாக்குதலையடுத்து ரயிலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்த நிலையில், அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment