TamilsGuide

தேவரின் வாரிசு என்ற பட்டத்தை… எம்.ஜி.ஆர். எப்படி ஏற்றுக்கொண்டார்? 

“தேவரின் வாரிசு” என்ற பட்டத்தை… எம்.ஜி.ஆர். எப்படி ஏற்றுக்கொண்டார்? 
1976… ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயணம்.
முதுகுளத்தூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையை எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார்.
அந்த விழாவில் பேசிய பலரும்,
“பசும்பொன் தேவரின் வாரிசு எம்.ஜி.ஆர்.” என்று புகழ்ந்து பேசினர்.
அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்…
“தியாகம்… ஒழுக்கம்… நேர்மை… அடக்கம்… அன்பு… நம்பிக்கை… உறுதி…”
இத்தனை உயர்ந்த பண்புகளையும் தன்னுள் கொண்ட தேவரின் வாரிசு என்று அழைக்கப்படுவது சாதாரணமான விஷயமல்ல என்றார்..
ஒரு மகத்தான தலைவரின் வாரிசு என்றால்,
அவருடைய பெயரைச் சொல்வது மட்டும் போதாது…
அவரைப் போல உண்மையைத் துணிவுடன் பேச வேண்டும்…
தேசிய உணர்வுடன் வாழ வேண்டும்…
மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவனாக வேண்டும்…
அறிவும் ஆளுமையும் கொண்டிருக்க வேண்டும்…
இத்தனை தகுதிகளும் எனக்கு இருக்கிறது என்று நான் சொல்லிக்கொண்டால்,
என்னைப் பொறுத்தவரை அது சந்தேகத்திற்குரிய விஷயம் என்ற அளவுக்கு எம்.ஜி.ஆர். தன்னைத் தாழ்த்திப் பேசினார்...
ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன கருத்துதான் வரலாறு…
“தேவரின் வாரிசாகச் செயல்படுவதற்கான பொறுப்பை மக்கள் என் மீது வைத்திருக்கிறார்கள். அந்தத் தகுதிக்கு என்னை நான் தயாராக்கிக் கொள்வேன்.”
இதுதான் எம்.ஜி.ஆர்.! 

தன்னைத் தானே “தேவரின் வாரிசு” என்று அறிவித்துக் கொள்ளவில்லை…
அந்தப் பெயருக்குத் தகுதியானவனாக வாழ வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்!
அதனால்தான் முதுகுளத்தூர் மக்கள் மனதில்
அன்றே எம்.ஜி.ஆருக்கு ஒரு தனி இடம் உருவானது...
பசும்பொன் தேவரின் பெயரைப் பயன்படுத்தி உயர நினைக்கவில்லை…
தேவரின் பண்புகளுக்கு தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள நினைத்தார்!
இதுதான் தலைமை.
இதுதான் பணிவு.
இதுதான் மக்கள் மீது கொண்ட நம்பிக்கை.
ஒரு தலைவரின் வாரிசு என்று சொல்லிக்கொள்வது பெருமையல்ல…
அந்தத் தலைவரின் கொள்கைகளுக்கு வாரிசாக வாழ்வதே பெருமை! ????
???????? பசும்பொன் தேவரின் வீரமும்…
புரட்சித்தலைவரின் பணிவும்…
தமிழக மக்களின் இதயத்தில் என்றும் அழியாத வரலாறு! ????????
 -  பாலசுப்ரமணியன் 
 

 

Leave a comment

Comment