TamilsGuide

30 வருடங்களாக தாம் சகோதரிகள் என தெரியாது பழகிய நண்பிகள்

30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள்.

சமீபத்தில் டி.என்.ஏ சோதனையில் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து இரு தோழிகளும் கட்டியணைத்து, கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நாங்கள் இருவரும் முப்பது வருடங்களாக சகோதரிகளாகவே இருந்திருக்கிறோம்.

ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை என உணர்ச்சி பொங்க அவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment