TamilsGuide

முன்பதிவிலேயே மாஸ் காட்டிய விஸ்வநாத் & சன்ஸ்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விஸ்வநாதன் & சன்ஸ் திரைப்படத்திற்கு, ஆன்லைன் முன்பதிவில் மிகத் தீவிரமாக டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

இன்று ரிலீஸாகியுள்ள நிலையில், தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

பிரபல நடிகர் சூர்யா நடிக்கும் , இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாதன் & சன்ஸ்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

தயாரிப்பு நிறுவனமான 'ரவிந்தர் சந்திரசேகரன் - லிப்ரா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகி, ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள "விஸ்வநாதன் & சன்ஸ்" திரைப்படத்திற்கு, ஆன்லைன் முன்பதிவில் தீவிரமான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

விஸ்வநாதன் & சன்ஸ் படம் இன்று திரைக்கு வந்துள்ள சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,72,230 (172.23K) டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு டிக்கெட்டின் சராசரி விலையாக ₹150 கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ஆன்லைன் தளத்தில் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் தோராயமாக ₹2.5 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது.

திரையரங்குகளில் இன்று காலை முதலே பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளதாலும், வார இறுதி நாட்கள் ஆரம்பமாக உள்ளதாலும், அடுத்தடுத்த காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தற்பொழுது மின்னல் வேகத்தில் தீர்ந்து வருகிறது.

இதனால் வரும் நாட்களில் இந்த வசூல் வேட்டை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a comment

Comment