செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை இன்றைய தினம் (14) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக , நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றில் அனுமதி கோரி இருந்த நிலையில் , அதற்கான அனுமதியினை நீதிமன்றம் வழங்கியதை அடுத்து , இன்றைய தினம் சி. சிறிதரன் அகழ்வு பணிகளை பார்வையிட்டார்.


