அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் திட்டமிடப்பட்டிருந்தன.
டென்னசியில் 66 வயதான அந்தோணி டேரல் ஹைன்ஸ், ஹோட்டல் பணியாளரான கேத்தரின் ஜென்கின்ஸை 1985ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
ஓக்லஹோமாவில் 70 வயதான கார்லோஸ் குயெஸ்டா-ரோட்ரிக்ஸ், 2003ஆம் ஆண்டு தனது காதலியை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அலபாமாவில் 42 வயதான ஜெரமி வில்லியம்ஸ், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் மரண தண்டனைக்கு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார்.
இந்த மூவருக்கும் மரண தண்டனை விஷ ஊசி மூலம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.
அமெரிக்காவில் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதி ஒரே நாளில் மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
அதன்பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறான மூன்று மரண தண்டனைகள் ஒரே நாளில் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


