TamilsGuide

காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா 

காதல் முறிவு குறித்தும், காதலரால் தான் அனுபவித்த துன்புறுத்தல்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

அனுபமா பரமேஸ்வரன்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நிம்மதியை அடைய பயனற்ற பாதையை கைவிட வேண்டியிருக்கும் எனவும், இனி தனது வாழ்க்கையை தானே தேர்ந்தெடுக்கிறேன் எனவும், வாழ்க்கையை கொண்டாடுவோம் என்றும் பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவு நடிகை அனுபமா தனது காதல் முறிவை பற்றித்தான் கூறியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டன. இந்நிலையில், காதல் முறிவு குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து பேசிய அவர், "அந்த பதிவிற்கு பின்னால் இரண்டு ஆண்டுகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலியை அனுபவித்தேன்".

தனது காதலர் குறித்து பேசும்போது, "நான் அனுபவித்தது narcisstic abuse எனப்படும் உளவியல் ரீதியான கடுமையான துன்புறுத்தல். இந்த விஷயங்களை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த வழியும், வேதனையும் தெரியும். ஒரு நாள் ரெமோவாக என்னை காதலிப்பார். அடுத்த நாளே அந்நியன் போன்று கொடூரமாக நடந்து கொள்வார். கடைசியாக அம்பியாக மாறி என்னிடம் இனி தவறு செய்ய மாட்டேன் என மன்னிப்பு கேட்பார். ஆனால், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது".

"ஒரு கட்டத்தில் நான் பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். நான் அவரிடம் ஒரு விஷயத்தை கூறினால் எப்படி நடந்து கொள்வாரோ என்ற பயத்தில் ஒத்திகை பார்த்து கொள்வேன். நான் நடித்து வெற்றி படங்களில் ஒன்று டிராகன். அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொள்ளவில்லை".

"எனது காதலன் மீது நம்பிக்கை வைத்து எனது தனிப்பட்ட வலிகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அதன்மூலம் என்னிடம் உணர்வுபூர்வமான பிணைப்பை உருவாக்கினார். முதலில் அந்த விஷயங்கள் நம் மீது வைக்கப்படும் அக்கறை போன்று தோன்றும், ஆனால், காலப்போக்கில் ஆதிக்கம் செலுத்த தொடங்குவார்கள்".

"ஒரு கட்டத்தில் நான் என்னை உடை அணிய வேண்டும் என்பதை கூட அவரே தேர்ந்தெடுத்தார். எனக்கே தெரியாமல் எனது சொந்த முடிவுகளை எடுத்தார். நான் அவரை காதலிக்க தொடங்கிய மூன்று மாதங்களில் அவரது குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது அவரது குடும்பத்தினர் நிச்சயதார்த்தம் வரை பேச தொடங்கினர். அப்போது நான் நிச்சயதார்த்தத்தை தள்ளிப்போட்டேன்" என கூறினார்.
 

Leave a comment

Comment