TamilsGuide

கப் நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்

கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையிலான பாரம்பரிய ‘கப்’ (Kap) நடும் நிகழ்வு இன்று (13) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வு காலை 6.17 மணிக்கு அமைந்த சுப வேளையில் நடைபெற்றது.

‘கப்’ (Kap) நடும் சடங்கைத் தொடர்ந்து, நாத, விஷ்ணு, பத்தினி மற்றும் கதிர்காமம் ஆகிய நான்கு முக்கிய ஆலயங்களிலும் இன்று முதல் ஆகஸ்ட் 17 வரை ஐந்து நாட்களுக்கு உள்வீதி ஊர்வலங்கள் நடைபெறும்.

ஆகஸ்ட் 18 அன்று முதல் ‘கும்பல் பெரஹரா‘ (Kumbal Perahera) வீதி உலா தொடங்கும்; 

இது ஆகஸ்ட் 22 வரை நடைபெறும்.

ஆகஸ்ட் 23 அன்று முதல் ‘ரந்தோலி பெரஹெரா’ (Randoli Perahera) தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பிரம்மாண்டமான இறுதி ஊர்வலம் ஆகஸ்ட் 27 அன்று நடைபெறும்.

திருவிழாவின் இறுதி நாளான ஆகஸ்ட் 28 அன்று, ‘நீர் வெட்டு’ (Diya Kepeema) சடங்கு மற்றும் பகல் நேர ஊர்வலம் ஆகியவை நடைபெறும்.

சடங்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அன்று மதியம் கண்டி ஜனாதிபதி மாளிகையில், ‘தியவதன நிலமே’ (Diyawadana Nilame) அவர்கள் பாரம்பரிய பெரஹெரா தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த நிகழ்வு, இவ்வருட கண்டி ‘ஏசல பெரஹெரா’  திருவிழாவின் நிறைவை அதிகாரப்பூர்வமாகக் குறிப்பதாகும்.
 

Leave a comment

Comment