ரூ. 25 மில்லியன் பெறுமதியான வீட்டு கட்டுமான மோசடி தொடர்பில் ஒருவர் கைது
இலங்கை
சமூக ஊடகங்கள் வாயிலாக வீடு கட்டும் சேவைகளை வழங்குவதாகக் கூறி, தனிநபர்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடித் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வீடு கட்டும் சேவைகளை விளம்பரப்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்திய சந்தேகநபர், மோசடியில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே தனிநபர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக சந்தேகநபர் மீது 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






















