TamilsGuide

வைபவ்வின் மாறு வேஷம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் வைபவ்வின் ‘மாறு வேஷம்’ திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் ஸ்ரீனி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள மாறுவேஷம் திரைப்படத்தில் வைபவ், வியானா, ராம்கி, முனிஸ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியம், இந்துமதி, மு. ராமசாமி, செல் முருகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைத்திருக்கிறார்.  படத்தை ஒனிரோமான்சி பிக்சர்ஸ் மற்றும் மங்கி மேன் கம்பனி ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானநிலையில், ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 

Leave a comment

Comment