• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்

இலங்கை

உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கொலம்பியா மக்களுக்கு இலங்கை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இலங்கைதேநீர்

இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 

கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நிகழ்ந்த துயரமான உயிரிழப்புகள் மற்றும் பரவலான சேதங்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தம் கொள்கிறது. 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன – என்று குறிப்பிட்டுள்ளார்.

கொலம்பியாவில் திங்களன்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கட்டிடங்களுக்குள்ளும் இடிபாடுகளுக்கு அடியிலும் சிக்கியுள்ள உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் காலத்தோடு போட்டியிட்டு ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலோர் காலி மற்றும் பெரேரா நகரங்களைச் சேர்ந்தவர்கள்.

Leave a Reply