TamilsGuide

பாதசாரிகள் மீது சொகுசு கார் மோதி விபத்து

கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மூவர் காயமடைந்தனர்; அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாஸ்கடுவ – காலி வீதியில் சென்ற அந்த வாகனம் எதிர் திசைப் பாதைக்குச் சென்று, பாதசாரிகள் மூவர் மீது மோதி, சாலையோரத்திலிருந்த இரண்டு எல்லைக் கற்களிலும் மோதிய பின்னர் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

வாகனத்தின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து நேர்த்திருக்கலாம் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தகவும் நடவடிக்‍கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment